/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; கிடங்கரை சாலையில் வேகத்தடை வேண்டும்
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; கிடங்கரை சாலையில் வேகத்தடை வேண்டும்
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; கிடங்கரை சாலையில் வேகத்தடை வேண்டும்
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; கிடங்கரை சாலையில் வேகத்தடை வேண்டும்
ADDED : ஆக 28, 2024 10:45 PM

கிடங்கரை சாலையில் வேகத்தடை வேண்டும்
உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடல் -- சாலவாக்கம் சாலையில், எடமச்சி அடுத்து கிடங்கரை கிராமம் உள்ளது. அருங்குன்றம், பட்டா, பொற்பந்தல், எடமச்சி, கிடங்கரை உள்ளிட்ட பகுதியினர், இச்சாலையை பயன்படுத்தி சாலவாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இச்சாலையில், கிடங்கரை அருகே அடுத்தடுத்து இரண்டு இடங்களில் அபாயகரமான வளைவு பகுதி உள்ளது. இந்த வளைவு பகுதிகளில், எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகின்றன.
எனவே, இச்சாலையில் உள்ள வளைவு பகுதிகளில், எச்சரிக்கை பலகை மற்றும் வேகத்தடை அமைத்து விபத்துகள் எற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ். பார்த்தசாரதி
பொற்பந்தல்.