/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம்:புகார் பெட்டி; டாஸ்மாக் கடையால் போக்குவரத்து நெரிசல்
/
காஞ்சிபுரம்:புகார் பெட்டி; டாஸ்மாக் கடையால் போக்குவரத்து நெரிசல்
காஞ்சிபுரம்:புகார் பெட்டி; டாஸ்மாக் கடையால் போக்குவரத்து நெரிசல்
காஞ்சிபுரம்:புகார் பெட்டி; டாஸ்மாக் கடையால் போக்குவரத்து நெரிசல்
ADDED : நவ 20, 2024 10:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டாஸ்மாக் கடையால் போக்குவரத்து நெரிசல்
காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதி, ஜவஹர்லால் நேரு காய்கறி மார்க்கெட் அருகில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இக்கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்களை நிறுத்த போதுமான பார்க்கிங் வசதி இல்லை.
இதனால், சாலையின் இரு ஓரங்களிலும் நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால், டாஸ்மாக் கடை அருகில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, விபத்து ஏற்படும் சூழலும் உள்ளது.
எனவே, செங்கழுநீரோடை வீதியில் இயங்கும் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- என்.கஜலட்சுமி,
காஞ்சிபுரம்..