/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கழிப்பறையை சீரமைக்க காரப்பேட்டை மக்கள் எதிர்பார்ப்பு
/
கழிப்பறையை சீரமைக்க காரப்பேட்டை மக்கள் எதிர்பார்ப்பு
கழிப்பறையை சீரமைக்க காரப்பேட்டை மக்கள் எதிர்பார்ப்பு
கழிப்பறையை சீரமைக்க காரப்பேட்டை மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 08, 2025 12:12 AM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் அடுத்த, கோனேரிகுப்பம் ஊராட்சியில், காரப்பேட்டை கிராமம் உள்ளது. இங்கு, 2020 - 21ம் நிதி ஆண்டு, 5.25 லட்ச ரூபாய் செலவில், சமுதாய சுகாதார வளாகம் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த சுகாதார வளாகத்தை பயன்படுத்தி, காரப்பேட்டை கிராம மக்கள் மற்றும் அங்கன்வாடி மைய குழந்தைகள், இயற்கை உபாதைகளை கழித்து வந்தனர்.
இந்த கட்டடம், ஓரிரு ஆண்டுகள் மட்டுமே பயன்பாட்டில் இருந்தது. அதன்பின், கழிப்பறைக்கு செல்லும் தண்ணீர் குழாய் அடைப்பு, கழிப்பறை பீங்கான் சேதம் உள்ளிட்ட இடையூறுகளால், சமுதாய கட்டடம் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதனால், கிராம மக்கள் மற்றும் அங்கன்வாடி மைய குழந்தைகள் இயற்கை உபாதைக்கு ஒதுங்க முடியவில்லை என, புலம்பல் எழுந்துள்ளது.
எனவே, சேதம் ஏற்பட்டிருக்கும் கழிப்பறை பீங்கான், குழாய் மாற்றம் செய்து சுகாதார வளாகத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, கிராம மக்கள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.