/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திருமாகரலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை
/
திருமாகரலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை
ADDED : டிச 12, 2024 10:30 PM
வாலாஜாபாத்:வாலாஜாபாத் வட்டாரம், மாகரல் கிராமத்தில், திருமாகரலீஸ்வரர் கோவில் உள்ளது.
ராஜராஜ சோழன் மன்னரால் கட்டப்பட்ட இக்கோவில், திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற தலமாகவ விளங்குகிறது.
இக்கோவிலில், புணரமைப்பு பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர்.
அக்கோரிக்கையை ஏற்று, அறநிலையத்துறை மற்றும் நன்கொடையாளர்கள் உதவியோடு, கடந்த சில மாதங்களாக கோவில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது.
பணிகள் முழுமையாக நிறைவு பெற்றதையடுத்து, நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது.
விழாவையொட்டி, கடந்த 3 நாட்களாக கோவில் வளாகத்தில் யாகசாலை அமைத்து பல்வேறு பூஜை நடைபெற்றது.
நேற்று அதிகாலை 5:00 மணிக்கு கலச புறப்பாடு நிகழ்ச்சியை தொடர்ந்து, காலை 5:30 மணிக்கு ராஜகோபுரம், மூலவர், விநாயகர், பாலசுப்பிரமணியர் உள்ளிட்ட அனைத்து பரிகார தெய்வங்களுக்கும், சிவாச்சாரியார்களால் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில், அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.