/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஊஞ்சல் மண்டபத்திற்கு கும்பாபிஷேகம்
/
ஊஞ்சல் மண்டபத்திற்கு கும்பாபிஷேகம்
ADDED : மார் 01, 2024 11:26 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் -- வந்தவாசி சாலையில் உள்ள வேகவதி ஆற்றின் வடகரையில் ஆகாய கன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் உபயதாரர்கள் சார்பில், புதிதாக ஊஞ்சல் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மண்டபத்தின் கும்பாபிஷேகத்த ஒட்டி, நேற்று காலை 5:00 மணிக்கு கலச ஏற்பாடும், 7:30 மணிக்கு கும்பாபிஷேகமும் நடைபெற்றது.
பகல் 12:00 மணிக்கு மூலவருக்கு அபிஷேகமும், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு கைச்சிலம்பிசையுடன் ஊஞ்சல் உற்சவமும், தொடர்ந்து பக்தி இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது.
விழாவிற்கான ஏற்பாட்டை ஓம் அங்காளம்மன் சாந்தி அபிஷேக குழு, அறம் வளர்த்தீஸ்வரர் கோவில் தெரு மற்றும் தோட்ட தெருவினர் செய்திருந்தனர்.

