sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

திருமாகரலீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

/

திருமாகரலீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

திருமாகரலீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

திருமாகரலீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்


ADDED : டிச 10, 2024 08:04 PM

Google News

ADDED : டிச 10, 2024 08:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, மாகரல் கிராமத்தில், திருபுவன நாயகி உடனுறை திருமாகரலீஸ்வரர் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலில் உபயதாரர்கள் மற்றும் பொது நல நிதியில் இருந்து பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் செய்து முடிக்கப்பட்டன.

கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று காலை 8:30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், மஹாலஷ்மி, நவக்கிரக பூஜை உள்ளிட்டவையும், மாலை 5:00 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை துவங்குயது.

நாளை அதிகாலை 3:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. அதிகாலை 4:30 மணிக்கு கலசங்கள் புறப்பாடு, தொடர்ந்து ராஜகோபுரம், விமானம், மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புனிதநீர் ஊற்றி வேதவிற்பன்னர்கள் கும்பாபிஷேகம் நடத்தி வைக்கின்றனர்.

காலை 7:30 மணிக்கு மஹா அபிஷேகம், தொடர்ந்து மஹாதீப ஆராதனை, மாலை 5:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், இரவு 7:00 மணிக்கு பஞ்சமூர்த்தி வீதியுலா நடக்கிறது.

கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாட்டை கோவில் செயல் அலுவலர் கதிரவன், தக்கார் வஜ்ஜிரவேலு, உபயதாரர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் மாகரல் கிராமத்தினர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us