/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நாய்கள் தொல்லையால் மலையாங்குளம் மக்கள் அச்சம்
/
நாய்கள் தொல்லையால் மலையாங்குளம் மக்கள் அச்சம்
ADDED : ஆக 19, 2025 12:28 AM

உத்திரமேரூர்,-மலையாங்குளத்தில் தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
உத்திரமேரூர் தாலுகா, மலையாங்குளம் கிராமத்தில் 2,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் தெருக்களில் சில மாதங்களாக நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளன.
தெருக்களில் கூட்டமாக சுற்றும் நாய்கள், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், சிறுவர்களை விரட்டி சென்று கடிக்கின்றன.
பொதுமக்கள் தினமும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இங்குள்ள, தெரு நாய்களில் பெரும்பாலானவை நோய் தாக்கிஉள்ளன.
இதனால், நாய்கள் கடித்து பாதிக்கப்படுவோர் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக செல்லும்போது, போதிய தடுப்பூசி இல்லாமல் சிரமப்படுகின்றனர்.
எனவே, மலையாங்குளத்தில் மக்களை அச்சுறுத்தும் தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்யவும், நாய்க்கடிக்கான தடுப்பூசி செலுத்தவும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.