/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காருக்கு தீ வைப்பு மர்மநபருக்கு வலை
/
காருக்கு தீ வைப்பு மர்மநபருக்கு வலை
ADDED : பிப் 12, 2025 10:33 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அப்பாராவ் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 53. இவர், பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர், தன் 'மாருதி ஸ்விப்ட் டிசைர்' காரை, வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்தார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணிக்கு, கார் தீப்பற்றி எரிவதாக அக்கம்பக்கத்தினர், ராஜேந்திரனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தபோது, காரின் பெரும்பகுதி எரிந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து, தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். சிவகாஞ்சி போலீசில் ராஜேந்திரன் அளித்த புகாரின்படி, 'சிசிடிவி' கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில், மர்ம நபர் ஒருவர் காரின் பின்பக்கம் தீ வைத்துவிட்டு, நடந்து செல்வது தெரியவந்துள்ளது. போலீசார் மர்மநபரை தேடி வருகின்றனர்.

