/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து நாளை மாரத்தான் ஓட்டம்
/
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து நாளை மாரத்தான் ஓட்டம்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து நாளை மாரத்தான் ஓட்டம்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து நாளை மாரத்தான் ஓட்டம்
ADDED : மே 03, 2025 01:02 AM
ஏனாத்துார்:மீனாட்சி அம்மாள் அறக்கட்டளையின், மீனாட்சி குழும நிறுவனங்களில் ஒன்றான, காஞ்சி வாணி வித்யாலயா, காஞ்சிபுரம் பள்ளி மாணவ - மாணவியருக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாளை, காலை 5:30 மணிக்கு, ஏனாத்துாரில் மாரத்தான் ஓட்டம் நடைபெறுகிறது.
இதில், 8 -- 10 வயதிற்கு உட்பட்ட மாணவ - மாணவியருக்கு ஒரு கி.மீ., துாரமும், 11 - 14 வயதுடைய மாணவ - மாணவியருக்கு 3 கி.மீ., துாரம் என, இரு பிரிவுகளில் மாரத்தான் ஓட்டம் நடைபெறுகிறது.
இதில், பங்கேற்கும் அனைத்து மாணவ - மாணவியருக்கும் இலவசமாக டி - ஷர்ட், எழுது பொருட்கள், பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
மாரத்தானில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் 88258 59066, 96774 55109 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.