/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நடைபயிற்சியில் பங்கேற்றோருக்கு காஞ்சியில் மருத்துவ பரிசோதனை
/
நடைபயிற்சியில் பங்கேற்றோருக்கு காஞ்சியில் மருத்துவ பரிசோதனை
நடைபயிற்சியில் பங்கேற்றோருக்கு காஞ்சியில் மருத்துவ பரிசோதனை
நடைபயிற்சியில் பங்கேற்றோருக்கு காஞ்சியில் மருத்துவ பரிசோதனை
ADDED : ஜன 05, 2025 07:35 PM
காஞ்சிபுரம்:தமிழக அரசின் மருத்துவம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் இயங்கும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, கடந்த 2023 நவம்பர் முதல், மாதந்தோறும் முதல் ஞாயிறன்று ‛நடப்போம் நலம் பெறுவோம்' என்ற 8 கி.மீ., துார நடைபயிற்சி இயக்கத்தை ஒவ்வொரு மாதமும் நடத்தி வருகிறது.
அதன்படி, 2025 ஜன., மாதத்திற்கான, 'நடப்போம் நலம் பெறுவோம்' இயக்கம் சார்பில், நடைபயிற்சி இயக்கம் நேற்று நடந்தது. காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க மதிப்புறு செயலர் டாக்டர் முத்துக்குமரன், முன்னாள் தலைவர் டாக்டர் மனோகரன், பரந்துார் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கண்ணன், நடைபயிற்சி மேற்கொள்வோர் சங்க தலைவர் சிவகுமார் சுந்தரம் ஆகியோர், கலெக்டர் அலுவலக வாயிலில் நடைபயிற்சியை துவக்கினர்.
இதில், மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர்கள், டாக்டர்கள், மாவட்ட மலேரியா அலுவலர் மணிவர்மா, மாநகராட்சி ஊழியர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து நடைபயிற்சி மேற்கொண்டோருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் செந்தில், காஞ்சிபுரம் மாநகர சுகாதார அலுவலர் டாக்டர் அருள்நம்பி உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.