/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சங்கரா கலை கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
/
சங்கரா கலை கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADDED : மார் 31, 2025 01:21 AM
ஏனாத்துார்:காஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்துாரில் உள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் முதுகலை மற்றும் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சித் துறை மற்றும் சென்னை கெமின் அக்வாசயின்ஸ் நிறுவனத்திற்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக கணினி முறைகளை பயன்படுத்தி, பார்வோ வைரஸ் தடுப்பான்களை மூலிகைகளிலிருந்து கண்டறிந்து, இறால் விவசாயத்தில் ஏற்படும் பொருளாதார இழப்பை குறைப்பதற்கான ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் கலை ராம வெங்கடேசன் தலைமையில் கையெழுத்திடப்பட்டது.
இந்த ஆராய்ச்சியில், சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் உயிரி தொழில்நுட்ப துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் ரமேஷ் மற்றும் உதவிப் பேராசிரியர் முனைவர் ராஜலட்சுமியும், கெமின் அக்வாசயின்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த முனைவர் ராஜலஷ்மி மற்றும் ஹரிகுமார் ஆகியோர் முதன்மை ஆராய்ச்சியாளர்களாக பணியாற்றுவர் என, கல்லுாரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.