/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மழைநீர் கால்வாய் அமைச்சாச்சு! சீரமைப்பில் சுணக்கம் ஏனோ?
/
மழைநீர் கால்வாய் அமைச்சாச்சு! சீரமைப்பில் சுணக்கம் ஏனோ?
மழைநீர் கால்வாய் அமைச்சாச்சு! சீரமைப்பில் சுணக்கம் ஏனோ?
மழைநீர் கால்வாய் அமைச்சாச்சு! சீரமைப்பில் சுணக்கம் ஏனோ?
ADDED : நவ 17, 2024 09:44 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், கருவேப்பம்பூண்டி கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மழைநீர் ஆகியவை வடிந்து செல்லாமல், தெருக்களிலேயே தேங்கி வந்தது.
இதனால், மழைநீர் வடிக்கால்வாய் அமைக்க வேண்டும் என, அப்பகுதியனர் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த 2021 - --22ம் நிதியாண்டில், 'பிரதான் மந்திரி ஆதர்ஸ் கிராம் யோஜனா' திட்டத்தில், 5.50 லட்சம் ரூபாயில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், கால்வாய் முறையான பராமரிப்பு இல்லாததால், தற்போது செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி உள்ளது. இதனால், மழைநீர் தடையின்றி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மழை பெய்தால் சாலையில் மழைநீர் தேங்கும் நிலை உள்ளது.
எனவே, மழைநீர் வடிகால்வாயில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றி சீரமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.