/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திருப்புலிவனத்தில் குரங்குகள் தொல்லை
/
திருப்புலிவனத்தில் குரங்குகள் தொல்லை
ADDED : நவ 28, 2025 04:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்: திருப்புலிவனத்தில் குரங்குகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
உத்திரமேரூர் ஒன்றியம், திருப்புலிவனத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றி திரிகின்றன. இவை திறந்து இருக்கும் வீடுகள் மற்றும் கடைகளில் கூட்டம் கூட்டமாக புகுந்து தின்பண்டங்கள், காய்கறிகள், பழங்களை எடுத்துச் சென்று விடுகின்றன.
எனவே, திருப்புலிவனத்ததில், அட்டகாசம் செய்து வரும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

