/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாசி படர்ந்த மழைநீர் தேக்கம் கொசு தொல்லை அதிகரிப்பு
/
பாசி படர்ந்த மழைநீர் தேக்கம் கொசு தொல்லை அதிகரிப்பு
பாசி படர்ந்த மழைநீர் தேக்கம் கொசு தொல்லை அதிகரிப்பு
பாசி படர்ந்த மழைநீர் தேக்கம் கொசு தொல்லை அதிகரிப்பு
ADDED : செப் 14, 2025 11:44 PM

காஞ்சிபுரம்;காஞ்சிபுரம் ரயில்வே சாலையோரம் தேங்கி பாசி படர்ந்த மழைநீரால் அப்பகுதியில் கொசு தொல்லை அதிகரித்து உள்ளது.
காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் மழைநீர் வெளியேறும் வகையில் நெடுஞ்சாலைத் துறை சார்பில், சாலையோரம் வடிகால்வாய் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இதில், ராஜாஜி மார்க்கெட் அருகில் மழைநீர் முழுமையாக வெளியேறாததால், மாநகராட்சி சார்பில், நான்கு மழைநீர் உறிஞ்சு குழிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், நீரோட்டம் பார்க்காமல் வடிகால்வாய் அமைக்கப்பட்டு உள்ளதாலும், மழைநீர் உறிஞ்சு குழிகளிலும் ஏற்பட்ட அடைப்பு காரணமாக ரயில்வே சாலையோரம் குளம்போல ஒரு வாரமாக மழைநீர் தேங்கியுள்ளது.
தற்போது, பாசி படர்ந்த நிலையில் உள்ளதால், அப்பகுதியில் கொசுத்தொல்லை அதிகரித்து, சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.
எனவே, ரயில்வே சாலையில், மழைநீர் முழுதும் வெளியேறும் வகையில், நீரோட்டத்தை சரி செய்து வடிகால்வாயையும், மழைநீர் உறிஞ்சு குழியில் ஏற்பட்ட அடைப்பை நீக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.