/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சேதமான சாலையால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
சேதமான சாலையால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
சேதமான சாலையால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
சேதமான சாலையால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : டிச 13, 2025 05:52 AM

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் இணைப்பு சாலையில், இயற்கை எரிவாயு குழாய்க்கான, 'மேன்ஹோல்' தொட்டி உள்ள இடத்தில், சாலை உள்வாங்கி சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி திணறுகின்றனர்.
தமிழகத்தில் குழாய் வழித்தடத்தில், இயற்கை எரிவாயு வினியோகம் செய்யப்படுகிறது. அந்த வகையில், ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் இணைப்பு சாலை நடுவே பள்ளம் தோண்டி, குழாய் வழியாக வாகனங்கள் பயன்பாட்டுக்கான எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது.
இதற்காக, அப்பகுதி குழாய் இணைப்பாக, 'மேன்ஹோல்' தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தொட்டியை சுற்றி, மண்ணை கொட்டி சரியாக மூடாமல், தார் ஊற்றி சாலை போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது தொட்டியை சுற்றி, சாலை உள்வாங்கி உள்ளது. இதனால், வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையில், இருசக்கர வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்கி வருகின்றனர்.
குறிப்பாக, இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள், சிதிலமடைந்த சாலையில் விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே, உயிர்சேதம் ஏற்படும் முன், உள்வாங்கிய சாலையை சீரமைக்க, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

