sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

புழுதி பறக்கும் நத்தாநல்லுார் சாலை திண்டாடும் வாகன ஓட்டிகள்

/

புழுதி பறக்கும் நத்தாநல்லுார் சாலை திண்டாடும் வாகன ஓட்டிகள்

புழுதி பறக்கும் நத்தாநல்லுார் சாலை திண்டாடும் வாகன ஓட்டிகள்

புழுதி பறக்கும் நத்தாநல்லுார் சாலை திண்டாடும் வாகன ஓட்டிகள்


ADDED : ஆக 30, 2025 10:46 AM

Google News

ADDED : ஆக 30, 2025 10:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: நத்தாநல்லுார் சாலையில், ஏரி மண் குவிந்து, புழுதி பறப்பதால், விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள் திண்டாடுகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் - வண்டலுார் இடையே, நான்கு வழி சாலை உள்ளது. இந்த சாலை வழியாக, ஒரகடம், படப்பை, தாம்பரம் மற்றும் கிளாம்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு வாகனங்கள் வந்து செல்கின்றன.

சமீபத்தில், நத்தாநல்லுார் ஏரியில் மண் அள்ளுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டதால், வாலாஜாபாத் - வண்டலுார் சாலை முழுதும், லாரிகளில் இருந்து மண் சிதறுகிறது.

இச்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், சாலையில் சிதறி கிடக்கும் மண்ணால் நிலை தடுமாறி விழுகின்றனர்.

மேலும், அந்த மண் சாலை வழியாக செல்லும் வாகனங்கள் புழுதியுடன் பறக்கின்றன.

எனவே, வாலாஜாபாத் - வண்டலுார் சாலையில் சிதறி கிடக்கும் மண்ணை, பெரியளவில் விபத்துகள் ஏற்படும் முன், சம்பந்தப்பட்ட துறையினர் அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us