/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நெடுஞ்சாலை ஓரம் அரிப்பு வாகன ஓட்டிகள் அச்சம்
/
நெடுஞ்சாலை ஓரம் அரிப்பு வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : டிச 11, 2024 11:07 PM

காஞ்சிபுரம்:சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்து, ஏனாத்துார் கட்டவாக்கம் கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலை உள்ளது.
இச்சாலை வழியாக, காரப்பேட்டை, செட்டியார்பேட்டை பகுதியில் இருந்து, ஏனாத்துார், கட்டவாக்கம், சமத்துவபுரம் ஆகிய பகுதிகளுக்கு வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர்.
பெஞ்சல் புயலால், தேசிய நெடுஞ்சாலைக்கும், கிராமத்திற்கு செல்லும் சாலை ஓர இணைப்பில், தார் சாலை அரிப்பு ஏற்பட்டு சேதம் ஏற்பட்டு உள்ளது.
இதனால், ஏனாத்துார், கட்டவாக்கம், சமத்துவபுரம் ஆகிய கிராமங்களில் இருந்து, சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை இணைப்பு சாலைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, சாலை ஓரம் ஏற்பட்டிருக்கும் சாலை அரிப்பை சரி செய்ய சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.