/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சேதமடைந்த சாலை சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
/
சேதமடைந்த சாலை சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
சேதமடைந்த சாலை சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
சேதமடைந்த சாலை சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
ADDED : அக் 23, 2024 12:47 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஒ.பி.குளம் தெரு, - மாண்டுகன்னீஸ்வரர் கோவில் சந்திப்பு, வணிகர் வீதி, கச்சபேஸ்வரர் கோவில் தெற்கு மாட வீதி உள்ளிட்ட பகுதிகள் வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையாக உள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக, இத்தெருக்களில் ஜல்லிக் கற்கள் பெயர்ந்து சாலை சேதமடைந்துள்ளது. இதனால் பள்ளம் ஏற்பட்டுள்ள பகுதியில் மழைநீர் தேங்குவதால், பள்ளம் இருப்பது தெரியாமல் இச்சாலையில் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, மழையால் சேதமடைந்த சாலையை ‛பேட்ச் ஒர்க்' பணியாக சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.