/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கடலில் மூழ்கியவர்களை காப்பாற்றும் கருவி முசரவாக்கம் பள்ளிக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு

ADDED : ஜூலை 17, 2025 01:30 AM

காஞ்சிபுரம்:கடலில் மூழ்கியவர்கள் எளிதாக தப்பிக்கும் வகையில், முசரவாக்கம் அரசு பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்த கடல்சார் பாதுகாப்பு 'இடுப்பு பட்டை' கருவி மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டது. இப்பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் அன்பரசன், ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி பாராட்டினார்.
இதுகுறித்து முசரவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜன் கூறியதாவது:
பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின் கீழ், மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில் மாவட்ட வாரியாக பங்கேற்ற 725 அணிகளில் 153 அணிகள் தேர்வாகின. இதில் காஞ்சிபுரம் அடுத்த முசரவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் கண்டுபிடிப்பான கடலில் மூழ்கியவர் எளிதாக தப்பிப்பது எப்படி என்ற கண்டுபிடிப்பான, கடல்சார் பாதுகாப்பு இடுப்பு பட்டை கருவிக்கு மாநில அளவில் முதல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது.
இதற்கான ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழை சென்னையில் நேற்று நடந்த விழாவில் அமைச்சர் அன்பரசன் எங்கள் பள்ளி மாணவர்களிடம் வழங்கினார்.
இந்த வெற்றிக்கு மாணவர்களோடு உறுதுணையாக இருந்த முதுகலை உயிரியியல் ஆசிரியை வாணிஸ்ரீ, முதுகலை இயற்பியல் ஆசிரியர் தமிழழகன் உட்பட அனைத்து அறிவியல் ஆசிரியர்களுக்கும் நேற்று பாராட்டு விழா நடந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.