/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாஸ்டர்ஸ் ஹாக்கி 'லீக்' நீலகிரி அணி வெற்றி
/
மாஸ்டர்ஸ் ஹாக்கி 'லீக்' நீலகிரி அணி வெற்றி
ADDED : டிச 17, 2024 12:57 AM
சென்னை, எஸ்.எம்., நகர் ஹாக்கி சங்கம்சார்பில், மாஸ்டர்ஸ் ஹாக்கி லீக் - 3.0 போட்டிகள்,போரூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரி வளாகத்தில், வார இறுதி நாட்களில் மட்டும் நடக்கின்றன.
போட்டியில்,எஸ்.எம்., நகர் ஆனந்த் பிரண்ட்ஸ், ஆதம்பாக்கம் வெட்ரன்ஸ், ஆவடி மாஸ்டர்ஸ், தண்டர் ஸ்குவாட், மெட்ராஸ் நேஷ்னல்ஸ்,யுனைடெட் வெட்ரன்ஸ், நீலகிரி வெட்ரன்ஸ், மவுன்ட் ஸ்டார்ஸ், மதுரை வெட்ரன்ஸ் உட்பட 10 அணிகள்பங்கேற்றுஉள்ளன.
நேற்று முன்தினம் மாலை நடந்தஆட்டத்தில், நீலகிரி வெட்ரன்ஸ் மற்றும் யுனைடெட் வெட்ரன்ஸ் அணிகள் மோதின.
விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில், 4 - 1 என்ற கோல் கணக்கில், நீலகிரி வெட்ரன்ஸ் அணி வெற்றிபெற்றது.
நீலகிரி வெட்ரன்ஸ் வீரர் கணேஷ்ஹாட்ரிக் கோல் அடித்தார். மற்றொரு வீரர் சந்தோஷ்ஒரு கோல் அடித்து வெற்றிக்கு கை கொடுத்தார்.
யுனைடெட்வெட்ரன்ஸ்அணியின் வீரர்மேகநாதன் ஒரு கோல் அடித்து,அந்த அணிக்குஆறுதல் கொடுத்தார்.
போட்டிகள், அடுத்த வார இறுதி வரை தொடர்ந்து நடக்கின்றன.

