/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலைகளில் கனரக வாகனங்களை நிறுத்தாமல் முனையத்தில் நிறுத்த அதிகாரிகள் அறிவுரை
/
சாலைகளில் கனரக வாகனங்களை நிறுத்தாமல் முனையத்தில் நிறுத்த அதிகாரிகள் அறிவுரை
சாலைகளில் கனரக வாகனங்களை நிறுத்தாமல் முனையத்தில் நிறுத்த அதிகாரிகள் அறிவுரை
சாலைகளில் கனரக வாகனங்களை நிறுத்தாமல் முனையத்தில் நிறுத்த அதிகாரிகள் அறிவுரை
ADDED : மார் 05, 2024 03:52 AM

ஸ்ரீபெரும்புதுார், : ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில் நடைபெற்ற, 'சிப்காட் தொழில் நண்பன் சந்திப்பு' கூட்டத்தில், சாலையோர வாகனங்கள் நிறுத்துவதை தடுத்து, கனரக வாகன நிறுத்தத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில் 180க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
இங்குள்ள தொழிற்சாலைகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், 'சிப்காட் தொழில் நண்பன் சந்திப்பு' கூட்டம் நேற்று நடந்தது.
ஒரகடம் சிப்காட் திட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பு கூட்டத்தை, ஒரகடம் தொழிற்பூங்கா மேற்பார்வையாளர் தேவஇரக்கம் தலைமை தாங்கினார்.
நெடுஞ்சாலை துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், பொதுப்பணித் துறை, மின்வாரியம் அதிகாரிகள் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.
இதில், ஒரகடம் சிப்காட் பகுதியில் செயல்படும் 10க்கும் மேற்பட்ட தொழிற்சாலையைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்று தங்களின் நிறுவனத்திற்கு தேவையான, மின் தேவை, குடிநீர், சாலை வசதி, பார்க்கிங் உள்ளிட்ட கோரிக்கைகளும், சிப்காட் சாலைகளில் மின்விளக்கு, சிசிடிவி அதிகரிக்க வேண்டும் என, தெரிவித்தனர்.
தொழிற்சாலையின் மூலப்பெருட்கள் மற்றும் உற்பத்தி பொருட்களை ஏற்றிவரும் கனரக வாகனங்கள் நெடுஞ்சாலைகளில் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்படுகின்றன.
இதனால், அவ்வாறு வரும் கனரக வாகனங்கள் வடக்குப்பட்டு, வைப்பூர், மேட்டுப்பாலயம், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாகன நிறுத்த முனையத்தில் நிறுத்த அறிவுறுத்தப்பட்டது.
அதிநவீன சிசிடிவி அமைக்கப்படுமா...
ஒரகடம் சிப்காட் சாலைகளில் இரவு நேங்களில் பணி முடிந்து வீடு திரும்பும் வட மாநில தொழிலாளர்களை குறிவைத்து, பைக்கில் வரும் கும்பல், கத்தியால் வெட்டி, மொபைல் போன் பறித்து செல்வது அதிகரித்து வருகிறது.
சிப்காட் சாலைகளில் 'சிசிடிவி' கேமரா இருந்தும் அதை பராமரிப்பதில்லை. பகலில் தெரிவது போன்று, இரவில் காட்சிகள் தெளிவாக தெரிவதில்லை.
இதனால், குற்ற சம்பங்களில் ஈடுபடும் கும்பலை பிடிக்க போலீசார் திணறி வருகின்றனர்.
எனவே, ஒரகடம் சிப்காட்டின் முக்கிய சந்திப்பு பகுதிகளில் அதிநவீன 'சிசிடிவி' கேமரா அமைக்க வேண்டும் என, போலீசார் தெரிவித்தனர்.
இதில், ஒரகடம் சிப்காட் திட்ட அலுவலர் காந்திமதி, சிப்காட் உதவி பொறியாளர் ஆனந்த் மற்றும் பல்வேறு துறையைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

