/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
381ல் 2 ஏரிகளில் மட்டும் 100 சதவீத தண்ணீர் இருப்பு
/
381ல் 2 ஏரிகளில் மட்டும் 100 சதவீத தண்ணீர் இருப்பு
381ல் 2 ஏரிகளில் மட்டும் 100 சதவீத தண்ணீர் இருப்பு
381ல் 2 ஏரிகளில் மட்டும் 100 சதவீத தண்ணீர் இருப்பு
ADDED : செப் 25, 2024 11:54 PM

காஞ்சிபுரம்:தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் துவங்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை பேரிடர் மேலாண்மை துறையினர் கவனிக்கின்றனர். அதேசமயம், பருவமழையை எதிர்பார்த்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
குறிப்பாக, ஏரி பாசனத்தை நம்பியிருக்கும் காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள், இந்த பருவமழையை பெரிதும் நம்பியுள்ளனர். மாவட்டம் முழுதும், நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில், 381 ஏரிகள் உள்ளன.
இந்த ஏரிகளில் பெரும்பாலும் கடந்தாண்டு டிசம்பரில் நிரம்பின. அடுத்து வந்த கோடை காலத்தில் ஏரிகள் வறண்டன. ஜூலை, ஆகஸ்டில் பெய்த தென்மேற்கு பருவமழை காலத்தில் சில ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்தன. ஆனால், பெரும்பாலான ஏரிகளில் போதிய தண்ணீர் இல்லை.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 381 ஏரிகளின் வாயிலாக, 12.3 டி.எம்.சி., தண்ணீர் சேமிக்க முடியும். ஏரி பாசனம் வாயிலாக, 1,22,742 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற முடியும்.
தற்போதைய நிலவரப்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 100 சதவீதம் 2 ஏரிகள் மட்டும் நிரம்பியுள்ளன. 75 சதவீதம் 53 ஏரிகளும், 50 சதவீதம் 75 ஏரிகளும், 25 சதவீதம் 117 ஏரிகளும், 25 சதவீதம் கீழாக 134 ஏரிகளும் தண்ணீர் இருப்பு உள்ளது.
அடுத்த மாதம் துவங்க உள்ள பருவமழை சமயத்தில், இந்த ஏரிகள் பெரும்பாலும் நிரம்பும் என, நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.