/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாலாஜாபாதில் ரூ.9.5 கோடியில் தடுப்பணை, அணைக்கட்டு திறப்பு
/
வாலாஜாபாதில் ரூ.9.5 கோடியில் தடுப்பணை, அணைக்கட்டு திறப்பு
வாலாஜாபாதில் ரூ.9.5 கோடியில் தடுப்பணை, அணைக்கட்டு திறப்பு
வாலாஜாபாதில் ரூ.9.5 கோடியில் தடுப்பணை, அணைக்கட்டு திறப்பு
ADDED : அக் 05, 2024 12:29 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகாவிற்கு உட்பட்ட தொள்ளாழி கிராமத்தில் உள்ள மடுவின் குறுக்கே அணைக்கட்டு கட்ட விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து, 7 கோடி ரூபாய் மதிப்பில், புதிய அணைக்கட்டு கட்டும் பணியை, நீர்வள ஆதாரத் துறையினர் கடந்த ஆண்டு தொடங்கினர்.
பணிகள் முடிக்கப்பட்டு, தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையிலிருந்து, காணொலி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார். தொள்ளாழி கிராமத்தில் நடந்த திறப்பு விழா நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, உத்திரமேரூர் தி.மு.க.,- - எம்.எல்.ஏ., சுந்தர் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
இந்த அணைக்கட்டு வாயிலாக மழைக்காலத்தில் வீணாக செல்லும் வெள்ளநீர் தடுத்து, தொள்ளாழி, தோனாகுளம், உள்ளாவூர் ஆகிய கிராமங்களில் உள்ள 291 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.
இந்த அணைக்கட்டு, 27 மீட்டர் நீளமும், 1.48 மீட்டர் உயம் கொண்டது. அணைக்கட்டில் 5,392 கன அடிக்கு நீர் சேகரமாகும் எனவும், 4,797 கன அடிநீர் வெளியேறும் என, நீர்வள துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல, உத்திரமேரூர் தாலுகாவிற்குட்பட்ட, இருமரம் கிராமத்தில், புத்தளி மடுவில், 2.5 கோடி ரூபாய் மதிப்பில், தடுப்பணை கட்டி நேற்று திறக்கப்பட்டது. இதன் வாயிலாக, 0.3 டி.எம்.சி., தண்ணீர் சேமிக்க முடியும்.