/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நெல் கொள்முதல் நிலையம் பாலேஸ்வரத்தில் திறப்பு
/
நெல் கொள்முதல் நிலையம் பாலேஸ்வரத்தில் திறப்பு
ADDED : மார் 27, 2025 08:09 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், பாலேஸ்வரம் கிராமத்தில், 2,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது.
தற்போது, இந்த கிராமத்தில் நவரை பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டு, அறுவடை பணிகள் நடந்து வருகின்றன. அவ்வாறு, அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய, அப்பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி, பாலேஸ்வரம் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.
உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று, நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார். பாலேஸ்வரம் ஊராட்சி தலைவர் சுந்தரமூர்த்தி, ஒன்றிய தி.மு.க., செயலர் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.