/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பயன்பாட்டில் இல்லாத கழிப்பறைக்கு பெயின்ட் அடிப்பு
/
பயன்பாட்டில் இல்லாத கழிப்பறைக்கு பெயின்ட் அடிப்பு
ADDED : ஜன 23, 2024 09:48 PM

காஞ்சிபுரம்:வாலாஜாபாதில் இருந்து, படப்பை செல்லும் சாலையில், வாலாஜாபாத் சார் - பதிவாளர் அலுவலக வளாகம் உள்ளது. இந்த கட்டடம் அருகே, போஜகார தெரு துவக்கத்தில், பேரூராட்சிக்கு சொந்தமான, சமுதாய கழிப்பறை கட்டடம் உள்ளது.
இந்த கட்டடத்தை, பேரூராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்கவில்லை. இதனால், பயன்பாடு இன்றி பூட்டிய நிலையில் காணப்படுகிறது.
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பின், பேவர் பிளாக் சாலை மற்றும் சமுதாய கழிப்பறை கட்டடம் சீரமைப்பு பணிக்கு, பல லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தனர்.
இதில், சமுதாய கழிப்பறை கட்டடத்திற்கு மட்டும் பெயின்ட் அடித்து சுத்தம் செய்து, கட்டடத்திற்கு பூட்டு போடப்பட்டு உள்ளது.
பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை என, அப்பகுதி மக்கள் இடையே புலம்பல் ஏற்படுத்தி உள்ளது.
இதனால், சார் - பதிவாளர் அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், சார் கருவூலம், பி.டி.ஓ., அலுவலகம், அரசு மருத்துவமனைக்கு செல்வோர் இயற்கை உபாதைக்கு ஒதுங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, பொது மக்களின் நலன் கருதி, வாலாஜாபாத் போஜகார தெருவில் பூட்டி இருக்கும் சமுதாய கழிப்பறை கட்டடம் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, மக்கள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.

