/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாலாறு பாலம் தடுப்புச்சுவர் 'பளிச்'
/
பாலாறு பாலம் தடுப்புச்சுவர் 'பளிச்'
ADDED : பிப் 04, 2025 12:49 AM

காஞ்சிபுரம், பிப். 4-
காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில், செவிலிமேடு -- புஞ்சையரசந்தாங்கல் இடையே உள்ள பாலாற்றின் குறுக்கே உள்ள உயர் மட்ட பாலத்தின் வழியாக சென்று வருகின்றன.
பாலத்தின் மீதுள்ள இரு தடுப்புச்சுவர்களின் மீது பூசப்பட்டிருந்த வர்ணம், மழை மற்றும் துாசுகளால், நிறம் மங்கி பொலிவிழந்து காணப்பட்டது.
தெரு மின்விளக்கு வசதி இல்லாத செவிலிமேடு பாலாறு மேம்பாலத்தில், தடுப்புச்சுவர்கள் நிறம் மங்கி இருந்ததால், இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர்.
எனவே, தடுப்புச்சுவருக்கு வெள்ளை மற்றும் கருப்பு நிற வர்ணம் பூச வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறை சார்பில், தடுப்புச் சுவர்களுக்கு வெள்ளை வர்ணம் தீட்டப்பட்டு, பராமரிக்கப்பட்டு உள்ளது.

