/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கூழமந்தல் அத்தி லிங்கத்திற்கு பஞ்ச வில்வ அர்ச்சனை
/
கூழமந்தல் அத்தி லிங்கத்திற்கு பஞ்ச வில்வ அர்ச்சனை
ADDED : ஜூலை 23, 2025 12:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூழமந்தல்:ஆடி மாத பிரதோஷத்தையொட்டி கூழமந்தல் நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில் அத்தி லிங்கத்திற்கு பஞ்ச வில்வ அர்ச்சனை நடந்தது.
காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, கூழமந்தல் நட்சத்திர விருச்ச விநாயகர் கோவிலில் உள்ள அத்தி லிங்க சிவபெருமானுக்கு நேற்று ஆடி மாத பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.
இதில், வில்வம், நொச்சி, கிளுவை, விளா, மாவிலங்கை ஆகிய பஞ்ச வில்வங்களால் அர்ச்சனை செய்யப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.