/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வரதராஜ பெருமாள் கோவிலில் பவித்ர உத்சவம் நிறைவு
/
வரதராஜ பெருமாள் கோவிலில் பவித்ர உத்சவம் நிறைவு
ADDED : செப் 14, 2025 02:20 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் பவித்ர உத்சவம் நேற்றுடன் நிறைவு பெற்றது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் திருப்பவித்ர உத்சவம் நடைபெறுவது வழக்கம். நடப்பு ஆண்டுக்கான திருப்பவித்ர உத்சவம் கடந்த 5ம் தேதி துவங்கியது. 6ம் தேதி திருப்பவித்ர அதிவாஸம் நடந்தது.
இதில், மூலவர், தாயார், சக்கரத்தாழ்வார், நரசிம்மர் மூலவ மூர்த்திகளுக்கு திருமஞ்சனம் நடைபெற்று, பவித்ரம் சாற்றுதல் வைபவம் நடந்தது.
இதில், திருக்கோவில் கிளி மண்பத்தில் அமைந்துள்ள யாக சாலையில் காலை, மாலை இரு வேளையும் ஹோமம் நடைபெற்று வந்தது.
திருப்பவித்ர உத்சவத்தையொட்டி கடந்த 7ம் தேதி முதல், நேற்று முன்தினம் வரை மாலை 5:30 மணியளவில் பெருமாள், உபயநாச்சியார் திருவடி கோவில் புறப்பாடு நடைபெற்றது.
தொடர்ந்து கோவிலில் கிளி மண்டபத்திற்கு வந்தடைந்தார். ஸ்ரீபெருமாள், உபயநாச்சியார் முன்னிலையில் ஹோமம் நடந்தது.
பவித்ர உத்சவம் நிறைவு நாளான நேற்று மாலை 5:30 மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள் மாட வீதி வந்தார். தொடர்ந்து பவித்ர உத்சவம் பூர்ணாஹூதி நடந்தது.