/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலை, கால்வாய் வசதிகள் ஏற்படுத்த கோரி மனு
/
சாலை, கால்வாய் வசதிகள் ஏற்படுத்த கோரி மனு
ADDED : அக் 29, 2025 10:15 PM
வாலாஜாபாத்: வாலாஜாபாத் பேரூராட்சி, 15வது வார்டில் சாலை, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தக்கோரி பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
வாலாஜாபாத் பேரூராட்சி செயல் அலுவலர் யமுனாவிடம் ராஜவீதியைச் சேர்ந்த சீனுவாசன் என்பவர் நேற்று அளித்த மனு:
வாலாஜாபாத் பேரூராட்சி, 15வது வார்டில் உள்ள ராஜவீதி, கம்மாளத் தெரு, ஈஸ்வரன் கோவில் தெரு, வன்னியர் தெரு, ஆற்றங்கரைத் தெரு பகுதிகளில் குப்பை அதிகம் குவிந்துள்ளன.
எனவே, வாரத்தில் ஒரு நாள் அப்பகுதிகளில் குப்பையை அகற்றி சுத்தம் செய்தல் பணி மேற்கொள்ள வேண்டும். 15வது வார்டில், திருமணமான தம்பதியர் பலருக்கு குடும்ப அட்டை வழங்காமல் உள்ளதால் குடும்ப அட்டைகள் பெற்றுதர உதவிட வேண்டும்.
கம்மாளத் தெ ரு, ஈஸ்வரன் கோவில் தெருவில் கழிவுநீர் கால்வாய் மற்றும் கான்கிரீட் தெரு வசதி ஏற்படுத்தி தர வேண்டும். அருந்ததியர் தெரு, வன்னியர் தெரு, கம்மாளத் தெரு, ஈஸ்வரன் கோவில் தெருக்களில் வீட்டு குழாய்களில் முறையாக குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜவீதியில் உள்ள வழிபோக்கர் தங்கும் மண்டபத்தை அறநிலையத் துறை மூலம் சீரமைத்து பொது மக்கள் தங்கும் வகையில் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

