/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஊத்துக்காடு டாஸ்மாக் கடையை இடம் மாற்ற கலெக்டரிடம் மனு
/
ஊத்துக்காடு டாஸ்மாக் கடையை இடம் மாற்ற கலெக்டரிடம் மனு
ஊத்துக்காடு டாஸ்மாக் கடையை இடம் மாற்ற கலெக்டரிடம் மனு
ஊத்துக்காடு டாஸ்மாக் கடையை இடம் மாற்ற கலெக்டரிடம் மனு
ADDED : ஆக 02, 2025 12:23 AM
வாலாஜாபாத்:ஊத்துக்காடில் செயல்படும் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வியிடம் மனு அளிக்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து, வாலாஜாபாதை சேர்ந்த சுந்தரராமன் என்பவர், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வியிடம் அளித்துள்ள மனுவில் கூறப் பட்டுள்ளதாவது:
வாலாஜாபாத் ஒன்றியம், ஊத்துக்காடு கிராமத்தில் டாஸ்மாக் கடை இயங்குகிறது. இப்பகுதியில், எல்லையம்மன் கோவில் மற்றும் அம்பாளம்மன் கோவில் உள்ளது. போதை நபர்களால் டாஸ்மாக் கடை அமைந்துள்ள சாலை வழியாக இக்கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் முகம் சுளிக்கும் நிலை உள்ளது.
மேலும், ஊத்துக்காடு பழங்குடியினர் குடியிருப்பில் இருந்து, அரசு பள்ளிக்கு சென்றுவரும் மாணவ - மாணவியர் மற்றும் ஊத்துக்காடில் இருந்து வங்கி போன்ற சேவைகளுக்கு வாலாஜாபாத் செல்லும் மகளிர் குழுவைச் சேர்ந்தோர் டாஸ்மாக் கடையையொட்டி உள்ள சாலையை பயன்படுத்துவதில் சிரமப்படுகின்றனர்.
இப்பகுதியில் ஏற்கனவே கொலை, வழிப்பறி போன்ற சம்பவங்களும் நடந்துள்ளதால் பல தரப்பினரும் அச்சப்படும் நிலை உள்ளது.
எனவே, ஊத்துக்காடு பகுதியில் இயங்கும் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.