/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பிளாஸ்டிக் நிறுவனத்தில் திடீர் தீ விபத்தால் பரபரப்பு
/
பிளாஸ்டிக் நிறுவனத்தில் திடீர் தீ விபத்தால் பரபரப்பு
பிளாஸ்டிக் நிறுவனத்தில் திடீர் தீ விபத்தால் பரபரப்பு
பிளாஸ்டிக் நிறுவனத்தில் திடீர் தீ விபத்தால் பரபரப்பு
ADDED : பிப் 20, 2025 12:45 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம் மல்லியங்கரணை கிராமத்தில் தனியார் பிளாஸ்டிக் நிறுவனம் உள்ளது. இங்கு, பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் மறுசுழற்சி செய்யும் பணி நடந்து வந்தது. நேற்று காலை 5:30 மணிக்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
அப்போது, காற்றின் வேகத்தில் தீ கொழுந்துவிட்டு எரிய துவங்கியது. இதனால், புகைமூட்டம் சூழ்ந்தது. இதுகுறித்து உத்திரமேரூர் தீயணைப்பு வீரர்கள் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இருப்பினும், பிளாஸ்டிக் பொருட்கள், வாகனங்கள் ஆகியவை தீயில் எரிந்து நாசமானது. இதுகுறித்து உத்திரமேரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.