/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சேந்தமங்கலம் ஏரிக்கரையில் 1,100 பனை விதைகள் நடவு
/
சேந்தமங்கலம் ஏரிக்கரையில் 1,100 பனை விதைகள் நடவு
ADDED : அக் 29, 2024 08:09 PM
காஞ்சிபுரம்:விதைகள் சுற்றுச்சூழல் தன்னார்வ அமைப்பு சார்பில், நான்காவது ஆண்டாக ஒரு லட்சம் பனை விதைகளை நடவு செய்யும் துவக்க விழா செப்., 8ம் தேதி வயலக்காவூர் ஏரிக்கரையில் துவங்கியது. இதில், ஒரே நாளில் 10,000க்கும் மேற்பட்ட பனை விதைகளை ஒரே நாளில் நடவு செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக சேர்காடு, பண்ருட்டி, திருவாங்கரணை ஏரிக்கரையிலும், வாலாஜாபாத் அரசு மருத்துவமனை வளாகத்திலும் பனை விதை நடவு செய்து, குறுங்காடு அமைக்க 1,000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.
ஏழாவது வார களப்பணியாக சேந்தமங்கலம் ஏரிக்கரையில் பனை விதை நடவு செய்யும் திருவிழா நேற்று நடந்தது. இதில், டாக்டர் ஆனந்த், பனை விதை நடவு செய்யும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
இதில், திரிவேணி அகாடமி தேசிய பசுமை படை மாணவர்கள், விதைகள் தன்னார்வ அமைப்பினர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலர் வெங்கடேசன் உள்ளிட்டோர், 1,100 பனை விதைகளை நடவு செய்தனர்.