/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் 4 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு
/
காஞ்சியில் 4 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு
காஞ்சியில் 4 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு
காஞ்சியில் 4 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு
ADDED : ஜன 03, 2025 07:51 PM
காஞ்சிபுரம்:பொங்கல் பண்டிகையையொட்டி, குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் தொகுப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் வாயிலாக, 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுகின்றனர்.
இதையடுத்து, அனைத்து ரேஷன் கடைகளில் பயனாளிகளுக்கான டோக்கன்கள் அனுப்பப்பட்டு உள்ளது. அந்த டோக்கன்கள் அனைத்தையும் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று வினியோக்கிப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்களை, ரேஷன் கடை ஊழியர்கள் வீடுகள்தோறும் வினியோகிக்க துவங்கி உள்ளனர். அதற்கான பணிகளை காஞ்சிபுரம் மாவட்டத்தில், நேற்று முன்தினமே துவங்கினர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து தாலுகாக்களிலும், 4.04 லட்சம் பயனாளிகள் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுகின்றனர். முதல் நாளில், 67,460 பேருக்கு டோக்கன் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள பயனாளிகளுக்கு விரைவில் வழங்கப்படும்.
அந்தந்த நாட்களில் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்குச் சென்று பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். வரும் 9ம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் துவங்க உள்ளது.

