/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆக்கிரமிப்புகளால் சுருங்கி வரும் புள்ளலுார் நீர்வரத்து கால்வாய்; பாசன வசதி பெறுவதில் சிக்கல்

ADDED : டிச 03, 2024 07:39 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி கிராமத்தில், நீர்வளத்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரி நீரை பயன் படுத்தி கோவிந்தவாடி, கம்மவார்பாளையம், படுநெல்லி உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், 1,250ஏக்கருக்கும் மேல் சம்பா, நவரை ஆகிய இருபருவங்களில் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.
இங்கு, நீர் பாசனத்திற்கு ஐந்து மதகுகள் உள்ளன. இதில், நரி மதகு வழியாக படுநெல்லி, கம்மவார் பாளையம் கால்வாய் வழியாக, புள்ளலுார் ஏரிக்கு செல்லும், 11 அடி அகலம்உடைய கால்வாய் உள்ளது.
இந்த கால்வாய் ஆக்கிரமிப்புகளில் சிக்கியுள்ளது. மேலும், கால்வாயை துார் வாராததால், கடைக்கோடி விவசாயிகளுக்கு, நீர்பாசனம் பெறுவதில்சிக்கல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, ஆக்கிரமிப்புகளால் கால்வாய் சுருங்கியதால், மழைக்காலத்தில் தண்ணீர் வயல்வெளிகளில் புகுந்து கடும் சேதத்தை ஏற்படுத்திவருகிறது.
எனவே, நீர்வளத்துறையினர் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பு மற்றும் கால்வாயை துார்வாரினால், விவசாயிகள் பாசன வசதி பெறுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து, கம்மவார்பாளையம் கிராமத்தைச்சேர்ந்த விவசாயிகள்கூறியதாவது:
கோவிந்தவாடி ஏரியில் உள்ள நரி மதகு வழியாக, 2 கி.மீ., துாரத்திற்கு பாசன கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் ஆக்கிரமிப்புகளால் குறுகி கடைக்கோடி விவசாயிகளுக்கு, தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது.
கோவிந்தவாடி பிரதான மதகு பாசன கால்வாய் வழியாக, 150 ஏக்கருக்கும் மேல் அதிவிரைவு சாலை விரிவாக்கத்திற்கு கையகப்படுத்தி உள்ளது.
எனவே, பொதுப்பணித் துறையினர் கால்வாய் துார்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள்கூறினர்.