/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாற்று திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கல்
/
மாற்று திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கல்
ADDED : பிப் 12, 2025 08:23 PM
காஞ்சிபுரம்:மாற்றுத்திறனாளிகளுக்கு இரண்டு மாதத்திற்கு ஒருமுறை சிறப்பு குறைதீர் கூட்டம் நடத்த மாற்றுத்திறனாளிகள் நல கமிஷனர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதை தொடர்ந்து, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாக கூட்டரங்கில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று நடந்தது.
இக்கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மனுக்களை பெற்று, குறைகளை கேட்டறிந்து, ஐந்து மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு, 5.15 லட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டன.
மேலும், முதுகு தண்டுவடத்தால் பாதித்த ஒருவருக்கு, 1.09 லட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரை கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார். இதில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி, அரசு அலுவலர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.