/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
127 பேருக்கு நல உதவிகள் வழங்கல்
/
127 பேருக்கு நல உதவிகள் வழங்கல்
ADDED : மார் 14, 2024 02:00 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் தாலுகாவிற்குட்பட்ட களியனுார் கிராமத்தில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.
இதில், வருவாய் துறை, கூட்டுறவு, சமூக நலத்துறை, சிறுபான்மை நலத்துறை, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி காட்சிபடுத்தப்பட்டிருந்தது. துறையில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் கிராம மக்களிடம் எடுத்து கூறப்பட்டது.
மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுவதை முன்னிட்டு, கடந்த 4ம் தேதி முதலே களியனுார் கிராமத்தில், மனுக்கள் பெறப்பட்டு, அதில் 127 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, 92 பேருக்கு வீட்டு மனை பட்டா, ஏழு பேருக்கு வேளாண் இடு பொருட்கள், இருவருக்கு கூட்டுறவு மகளிர் சுயஉதவிக் குழு கடன் என, 127 பேருக்கு, 1.81 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார்.
இம்முகாமில், காஞ்சிபுரம் தி.மு.க.,- - எம்.எல்.ஏ., எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், திட்ட இயக்குனர் ஜெயகுமார், கோட்டாட்சியர் கலைவாணி உட்பட பலர் பங்கேற்றனர்.

