/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விபத்து வழக்கில் ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு 'பிடிவாரன்ட்'
/
விபத்து வழக்கில் ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு 'பிடிவாரன்ட்'
விபத்து வழக்கில் ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு 'பிடிவாரன்ட்'
விபத்து வழக்கில் ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு 'பிடிவாரன்ட்'
ADDED : பிப் 26, 2024 04:44 AM
சென்னை, : செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சோனியா, 24. இவரது கணவர் வேல்முருகன்.
கடந்த 2020 ஜன., 17ல், நண்பர் மோகன் என்பவரை பைக்கில் அழைத்துக்கொண்டு, மாமல்லபுரம் அருகே உள்ள 'பங்க்'கில் பெட்ரோல் நிரப்ப, தம்பதி சென்று உள்ளனர்.
பெட்ரோல் நிரப்பிய பின், மாமல்லபுரத்தில் இருந்து பூஞ்சேரி நோக்கி வாகனத்தை திருப்பியுள்ளார். அப்போது, தனலட்சுமி சீனிவாசன் கல்லுாரி அருகில், சென்னை -- புதுச்சேரி செல்லும் சாலையில், இடது புறம் நிறுத்தப்பட்டிருந்த 'ஹோண்டா' கார் மீது, வேல்முருகன் பைக் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், பலத்த காயம் அடைந்த வேல்முருகன், சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த நிலையில், கணவரின் இறப்புக்கு இழப்பீடு கோரி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில், சோனியா வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, சிறு வழக்குகளுக்கான நீதிமன்ற முதன்மை நீதிபதி ஸ்ரீதேவி முன், விசாரணையில் உள்ளது.
இந்த வழக்கின் சாட்சி விசாரணைக்கு ஆஜராகும்படி, மாமல்லபுரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டருக்கு, கடந்தாண்டு மே., 22ல் நீதிமன்றம் 'சம்மன்' அனுப்பியது.
'சம்மன்' பெற்று ஓராண்டுக்கு மேலாகியும், சாட்சி விசாரணைக்கு ஆஜராகாததால், மாமல்லபுரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டருக்கு, ஜாமினில் வெளிவரக்கூடிய 'வாரன்ட்' பிறப்பித்த முதன்மை நீதிபதி ஸ்ரீதேவி, மார்ச்., 21ல் வழக்கு விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

