/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காலிமனையில் மழைநீர் தேக்கம் மேட்டு நகரில் சுகாதார சீர்கேடு
/
காலிமனையில் மழைநீர் தேக்கம் மேட்டு நகரில் சுகாதார சீர்கேடு
காலிமனையில் மழைநீர் தேக்கம் மேட்டு நகரில் சுகாதார சீர்கேடு
காலிமனையில் மழைநீர் தேக்கம் மேட்டு நகரில் சுகாதார சீர்கேடு
ADDED : பிப் 04, 2025 12:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் ஒன்றியம்,புத்தேரி ஊராட்சி, மேட்டு நகரில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நகரில் உள்ள காலிமனையில் குட்டைபோல மழைநீர் தேங்கியுள்ளது.
பருவநிலை மாற்றத்தால், தேங்கியுள்ள மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகும் சூழல் உள்ளது.
இதனால், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, காலி மனையில், தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்தவும், இப்பகுதியில் மழைநீர் வெளியேறும் வகையில், வடிகால்வாய் வசதி ஏற்படுத்தவும், புத்தேரி ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மேட்டு நகர்வாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.
- தினேஷ் குமார்,புத்தேரி.