/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ரேஷன் கார்டு குறைதீர் கூட்டம் 164 மனுக்கள் மீது உடனடி தீர்வு
/
ரேஷன் கார்டு குறைதீர் கூட்டம் 164 மனுக்கள் மீது உடனடி தீர்வு
ரேஷன் கார்டு குறைதீர் கூட்டம் 164 மனுக்கள் மீது உடனடி தீர்வு
ரேஷன் கார்டு குறைதீர் கூட்டம் 164 மனுக்கள் மீது உடனடி தீர்வு
UPDATED : மே 11, 2025 12:34 AM
ADDED : மே 10, 2025 07:02 PM
காஞ்சிபுரம்:உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், மாதந்தோறும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து தாலுகாவிலும் பொதுவினியோக குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி மே மாதத்திற்கான பொதுவினியோக குறைதீர் கூட்டம், காஞ்சி புரம் தாலுகாவில் கோவிந்தவாடி கிராமம், உத்திரமேரூரில் பென்னலுார், வாலாஜாபாதில் புளியம்பாக்கம், ஸ்ரீபெரும்புதுாரில்வல்லம், குன்றத்துாரில் வடக்குப்பட்டு என, ஐந்து தாலுகாவிலும் பொதுவினியோக குறைதீர்கூட்டம், நேற்று நடந்தது.
இதில், புதிய ரேஷன் கார்டு, நகல் அட்டை, முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல், நீக்கம், மொபைல் போன் எண் மாற்றம், அட்டை வகை மாற்றம் என, மாவட்டம் முழுதும் உள்ள ஐந்து தாலுகாவிலும், மொத்தம் 179 மனுக்கள் வரப்பெற்றன.
இதில், தகுந்த ஆவணங்கள் இணைக்கப்பட்ட 164 மனுக்கள் மீது குறைதீர் கூட்டத்தில் உடனடியாக தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 15 மனுக்கள் மீது உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்படும் என, காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பாலாஜி தெரிவித்தார்.