/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உயிரிழந்த மூன்று வாலிபர்களின் உறவினர்கள் திடீர் சாலை மறியல்
/
உயிரிழந்த மூன்று வாலிபர்களின் உறவினர்கள் திடீர் சாலை மறியல்
உயிரிழந்த மூன்று வாலிபர்களின் உறவினர்கள் திடீர் சாலை மறியல்
உயிரிழந்த மூன்று வாலிபர்களின் உறவினர்கள் திடீர் சாலை மறியல்
ADDED : ஜன 17, 2025 12:54 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், காட்டாங்குளம் ஊராட்சி, விழுதவாடி கிராமத்தில் உள்ள ஏரியில், மூன்று வாலிபர்களின் உடல் மிதப்பதாக, அப்பகுதிவாசிகள் உத்திரமேரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, வெட்டுக் காயங்களுடன், அழுகிய நிலையில் இருந்த மூன்று பேரின் உடல்களை மீட்டனர்.
விசாரணையில், இறந்தவர்கள் பழையசீவரம் பரத்ராஜ், 17, சத்ரியன், 17, விஷ்வா, 18, என தெரியவந்தது. இதையடுத்து, உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இறந்த மூன்று பேரின் உறவினர்கள் மற்றும் கிராமத்தினர், மூவரும் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கோரியும், காஞ்சிபுரம் - - செங்கல்பட்டு சாலையில், நேற்று காலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த காஞ்சிபுரம் போலீஸ் டி.எஸ்.பி., சங்கர்கணேஷ் சாலை மறியலில் ஈடுபட்டவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினார். அதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.