/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூரில் கடைகளுக்கு வாடகை கட்டணம் , 15 சதவீதம் உயர்வு
/
உத்திரமேரூரில் கடைகளுக்கு வாடகை கட்டணம் , 15 சதவீதம் உயர்வு
உத்திரமேரூரில் கடைகளுக்கு வாடகை கட்டணம் , 15 சதவீதம் உயர்வு
உத்திரமேரூரில் கடைகளுக்கு வாடகை கட்டணம் , 15 சதவீதம் உயர்வு
ADDED : ஜூலை 05, 2025 10:20 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு, 15 சதவீதம் வாடகை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில் உள்ள 23 கடைகளை பேரூராட்சி நிர்வாகத்தினர், 3 ஆண்டுக்கு ஒருமுறை குத்தகை விட்டு வருகின்றனர்.
இந்த கடைகளுக்கு, 2016ல் இருந்து, 2024ம் ஆண்டு வரை 9 ஆண்டுகள் குத்தகை விடப்பட்டு இருந்தது. இந்த குத்தகை காலம் முடிந்து விட்டதால், வரும் 2027 வரை, 3 ஆண்டுகள் குத்தகைவிட, கடந்த 2ம் தேதி நடைபெற்ற பேரூராட்சி கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதில், இந்த மாதத்தில் இருந்து வாடகை கட்டணத்தில் 15 சதவீதம் உயர்த்தி, வாடகை வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:
உத்திரமேரூர் பேருந்து நிலைய கடைகளுக்கு 5,000 ரூபாயும், வெளியே உள்ள கடைகளுக்கு 8,000 ரூபாயும் என, வாடகை கட்டி வருகிறோம்.
தற்போது, வாடகை கட்டணம் 15 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது, கடைகளில் வியாபாரம் மந்தமாக இருப்பதால், வாடகை கட்டண உயர்வை பேரூராட்சி நிர்வாகம் உடனே திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.