/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சேதமான செவிலிமேடு சாலை நெடுஞ்சாலை துறை சீரமைப்பு
/
சேதமான செவிலிமேடு சாலை நெடுஞ்சாலை துறை சீரமைப்பு
ADDED : நவ 08, 2024 12:26 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, செவிலிமேடு வழியாக அய்யங்கார்குளம், வெம்பாக்கம், பெருநகர், மானாம்பதி மற்றும் சுற்றுவட்டார ஊர்களுக்கு செல்லும் பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன.
வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இச்சாலையில், சமீபத்தில் பெய்த மழையின் செவிலிமேடில் சாலையின் மையப்பகுதியில் ஆங்காங்கே 10க்கும் மேற்பட்ட இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு சாலை சேதமடைந்த நிலையில் இருந்தது.
இதனால், வேகமாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டதால், இச்சாலைய சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, காஞ்சிபுரம் உபகோட்டம் நெடுஞ்சாலைத் துறை சார்பில், சேதமடைந்த சாலையை ‛பேட்ச் ஒர்க்' பணியாக தார் கலவை வாயிலாக நேற்று சீரமைக்கப்பட்டது.