/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஓரிரு நாட்கள் பெய்த மழைக்கே சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு
/
ஓரிரு நாட்கள் பெய்த மழைக்கே சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு
ஓரிரு நாட்கள் பெய்த மழைக்கே சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு
ஓரிரு நாட்கள் பெய்த மழைக்கே சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு
ADDED : அக் 18, 2024 02:15 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சிக்குட்பட்ட காந்தி சாலை, திருவள்ளூர் சாலை, பேருந்து நிலைய சாலை, தேரடி சாலை உள்ளிட்டவை வாகன போக்குவரத்து அதிகம் உள்ள சாலைகளாக உள்ளது.
இரண்டு நாட்களாக பெய்த மழையால், ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியின் முக்கிய சாலைகள் அனைத்தும் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது.
இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதையடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதை தொடர்ந்து, மழையால் சேதமடைந்த சாலையை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
முதற்கட்டமாக வாகன போக்குவரத்து அதிகம் உள்ள பிரதான சாலைகளில், சேதமடைந்து அதிக பள்ளம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் சீரமைக்கும் பணி நடந்து வருவதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.