/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செம்பரம்பாக்கத்தில் பாலம் பணி விரைந்து முடிக்க வேண்டுகோள்
/
செம்பரம்பாக்கத்தில் பாலம் பணி விரைந்து முடிக்க வேண்டுகோள்
செம்பரம்பாக்கத்தில் பாலம் பணி விரைந்து முடிக்க வேண்டுகோள்
செம்பரம்பாக்கத்தில் பாலம் பணி விரைந்து முடிக்க வேண்டுகோள்
ADDED : செப் 21, 2024 01:28 AM

பூந்தமல்லி:சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தினமும், லட்சக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்ததால், இச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
வாகன நெரிசலை குறைக்க முதற்கட்டமாக, இந்த சாலையில் மதுரவாயல் முதல் ஸ்ரீபெரும்புதுார் சுங்கச்சாவடி வரை, 23 கி.மீ., துாரத்திற்கு, 426 கோடி ரூபாய் மதிப்பில், ஆறுவழிச் சாலையாக அண்மையில் விரிவுபடுத்தப்பட்டது.
இந்த பணியின் ஒரு பகுதியாக, பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் கிராமம் அருகே, தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் செல்லும் பங்காரு கால்வாய் குறுக்கே, ஏற்கனவே உள்ள பாலத்தின் அருகே விரிவாக்கம் செய்து, புதிய பாலம் அமைக்கும் பணி நடக்கிறது.
தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி நிறைவுற்ற நிலையில், பாலம் கட்டுமான பணி மந்த கதியில் நடக்கிறது. இதனால், காலை மற்றும் மாலை நேரத்தில், அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது.
மேலும், கட்டுமான பணியால் பாலத்தின் கீழ் தண்ணீர் செல்லும் வழிகள் அடைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதால், இந்த பாலம் கட்டுமான பணிகளை விரைவாக முடித்து, தண்ணீர் செல்ல வழி ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், 'பாலம் கட்டுமானம் பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது. ஒரு மாதத்திற்குள் பணிகள் நிறைவடையும்' என்றார்.