/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
களக்காட்டூர் அக்னீஸ்வரர் கோவில் பழமை மாறாமல் புதுப்பிக்க கோரிக்கை
/
களக்காட்டூர் அக்னீஸ்வரர் கோவில் பழமை மாறாமல் புதுப்பிக்க கோரிக்கை
களக்காட்டூர் அக்னீஸ்வரர் கோவில் பழமை மாறாமல் புதுப்பிக்க கோரிக்கை
களக்காட்டூர் அக்னீஸ்வரர் கோவில் பழமை மாறாமல் புதுப்பிக்க கோரிக்கை
ADDED : டிச 03, 2024 07:35 AM

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் ஒன்றியம் களக்காட்டூரில், சந்திரமேக தடாகம் என்ற ஏரிக்கரை அருகில் காமாட்சி அக்னீஸ் வரர் கோவில் உள்ளது. சிவன் அக்னி வடிவானவர்என்பதால், சுவாமியை குளிர்விக்கும் வகையில், இந்த ஏரி அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பழமையான இக் கோவில் ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு, நித்யகால பூஜை, பிரதோஷம், பவுர்ணமி, மாத சிவராத்திரி, மஹா சிவராத்திரி உள்ளிட்ட நாட்களில் மூலவருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.
இக்கோவிலுக்கு செல்ல முறையான பாதை வசதி இல்லாததால், ஏரிக்கரை வழியாக செல்ல வேண்டியுள்ளது. மழைக்காலத்தில் ஏரிக்கரை சாலை சகதியாக இருப்பதால், இக்கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் நடந்து செல்லவே சிரமப்படுகின்றனர்.
முறையான பராமரிப்பு இல்லாததால், இக்கோவில்சுவரில் ஆங்காங்கேசெடிகள் முளைத்துசிதிலமடைந்த நிலையில் உள்ளது.
எனவே, பழமை மாறாமல் இக்கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்தவும், இக்கோவிலுக்கு செல்ல சாலை வசதி ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.