/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாலாஜாபாத் - தாம்பரம் இடையே கூடுதல் பேருந்து இயக்க கோரிக்கை
/
வாலாஜாபாத் - தாம்பரம் இடையே கூடுதல் பேருந்து இயக்க கோரிக்கை
வாலாஜாபாத் - தாம்பரம் இடையே கூடுதல் பேருந்து இயக்க கோரிக்கை
வாலாஜாபாத் - தாம்பரம் இடையே கூடுதல் பேருந்து இயக்க கோரிக்கை
ADDED : ஏப் 22, 2025 12:28 AM
வாலாஜாபாத், வாலாஜாபாத் சுற்றிலும் பல்வேறு தனியார் தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. தொடர்ந்து புதிய தொழிற்சாலைகளும் துவங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, வாலாஜாபாத் - ஒரகடம் சாலையில் உள்ள ஊத்துக்காடு, கட்டவாக்கம், தேவேரியம்பாக்கம், சிங்காடிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தொழிற்சாலைகள் அதிகரித்து வருகின்றன.
இந்த தொழிற்சாலைகளில் வாலாஜாபாத் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
இந்நிலையில், வாலாஜாபாத் - ஒரகடம் சாலையில், காலை நேரத்தில் போதுமான பேருந்து வசதி இல்லாததால், தொழிலாளர்கள் பலரும் குறித்த நேரத்திற்கு பணிக்கு செல்ல இயலாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து, அப்பகுதி தொழிலாளர்கள் சிலர் கூறியதாவது:
காஞ்சிபுரத்தில் இருந்து, வாலாஜாபாத், ஒரகடம் வழியாக தாம்பரம் செல்லும் தடம் எண்:79, அரசுப் பேருந்து வழிநில்லா பேருந்தாக இயங்குகிறது. இதனால், இப்பேருந்து வாயிலாக பயணித்து இடையிலான கிராமங்களில் உள்ள கம்பெனிகளுக்கு சென்றடைய முடிவதில்லை.
வாலாஜாபாத்தில் இருந்து, தாம்பரம் செல்லும் தடம் எண்:579, பேருந்து அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்லக்கூடியதாக உள்ளது.
எனினும், அப்பேருந்து, காலை நேரத்தில் 7:00 மற்றும் 8:30 மணிக்கு என, இரண்டு சிங்கிள் மட்டும் இயக்கப்படுகிறது. இதனால், இந்த வழி தடம் மார்க்கமாக வேலைக்கு செல்லும் ஏராளமான தொழிலாளர்கள் போக்குவரத்து வசதி இல்லாமல் அவதிப்படுகின்றனர்.
எனவே, வாலாஜாபாத் --- தாம்பரம் இடையே இயக்கப்படும் தடம் எண்:579 அரசுப் பேருந்தை, காலை நேரத்தில் கூடுதலாக இயக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.