/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையோரத்தில் தடுப்பு இல்லாததால் விபத்து அபாயம்
/
சாலையோரத்தில் தடுப்பு இல்லாததால் விபத்து அபாயம்
ADDED : ஏப் 25, 2025 01:33 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட, வேடபாளையம் பகுதியில் முதலாவது குறுக்கு தெரு உள்ளது. இந்த தெருவில் பல ஆண்டுகளாக சாலை அமைக்காமல் மண் சாலையாக இருந்து வந்தது.
இந்த மண் சாலையை சிமென்ட் சாலையாக மாற்ற, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, 2024 --- 25 நிதி ஆண்டில், பேரூராட்சி பொது நிதியின் கீழ், 7 லட்சம் ரூபாய் செலவில், புதிய சிமென்ட் சாலை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இந்நிலையில், இந்த சாலையையொட்டி ஏரிநீர் பாசன கால்வாய் செல்கிறது. சாலையையொட்டி செல்லும் கால்வாய் 5 அடி ஆழம் உள்ளதால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறி, கால்வாயில் விழுந்து விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது.
எனவே, சிமென்ட் சாலையையொட்டி ஏரிநீர் பாசன கால்வாய் செல்லும் பக்கத்தில், சாலையோர தடுப்பு அமைக்க, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

