/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கழிவுநீர் கால்வாயில் குடிநீர் குழாய் பால்நல்லுார்கண்டிகையில் தொற்று பரவும் அபாயம்

ADDED : டிச 13, 2024 01:53 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், பால்நல்லுார் ஊராட்சிக்குட்பட்ட, பால்நல்லுார்கண்டிகை பகுதியில். 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதுதவிர, வல்லம் வடகால் சிப்காட் தொழிற்சாலைகளில் பணிபுரியும், பீஹார், ஒடிசா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வாடகைக்கு தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
இப்பகுதி மக்களுக்கு, மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து, குழாய் வாயிலாக தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கழிவுநீர் கால்வாயில் குடிநீர் குழாய் செல்கிறது.
மேலும், குடிநீர் குழாயில் லேசான விரிசல் அல்லது உடைப்பு ஏற்பட்டால், குடிநீரில் கழிவுநீர் கலக்கும் அபாயம் உள்ளது. அவ்வாறு குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்தால், அதை பருகும் அப்பகுதிவாசிகளுக்கு, தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
இதன் காரணமாக, அப்பகுதியைச் சேர்ந்த பெருவாரியான மக்கள், அதிக விலைக்கு கடைகளில் குடிநீர் கேன் வாங்கி குடிக்கும் அவலநிலை உள்ளது.
எனவே, ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன், இப்பகுதிவாசிகளின் நலனை கருத்தில் கொண்டு, கழிவுநீரில் செல்லும் குடிநீர் குழாய் இணைப்பை மாற்றி அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.