/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் சாலை சேதம்; வாகன ஓட்டிகள் அவதி
/
சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் சாலை சேதம்; வாகன ஓட்டிகள் அவதி
சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் சாலை சேதம்; வாகன ஓட்டிகள் அவதி
சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் சாலை சேதம்; வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஜன 26, 2025 01:20 AM

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரத்தில் இருந்து சிறுகாவேரிபாக்கம், கீழம்பி, தாமல், பாலுசெட்டிசத்திரம், ஆற்காடு, வேலுார், பெங்களூரூ உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள். ஒலிமுஹமதுபேட்டை வழியாக சென்று வருகின்றன.
வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு. கடந்த ஒரு வாரமாக சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.
தொடர்ந்து வெளியேறும் கழிவுநீரால், மண் அரிப்பு ஏற்பட்டு சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், காஞ்சிபுரத்தில் இருந்து கீழம்பி நோக்கி சாலையின் இடதுபக்கமாக செல்லும் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளம் உள்ள பகுதியை கடக்கும்போது, திடீரென வாகனத்தை வலதுபக்கம் திருப்பும்போது, பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுகிறது.
மேலும், இச்சாலையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில், பாதாள சாக்கடை ‛மேன்ஹோல்' உள்ள பகுதி சாலையின் தரைமட்டத்தைவிட பள்ளமாக இருப்பதால், இரவு நேரத்தில் சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, ஒலிமுஹமதுபேட்டையில் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை நீக்கவும், ‛மேன்ஹோல்' உள்ள பகுதியில் உள்ள பள்ளத்தை சமன் செய்யவும், மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.