/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புழுதி மண்டலமாக மாறிய சாலை ஒரகடம் வாகன ஓட்டிகள் அவஸ்தை
/
புழுதி மண்டலமாக மாறிய சாலை ஒரகடம் வாகன ஓட்டிகள் அவஸ்தை
புழுதி மண்டலமாக மாறிய சாலை ஒரகடம் வாகன ஓட்டிகள் அவஸ்தை
புழுதி மண்டலமாக மாறிய சாலை ஒரகடம் வாகன ஓட்டிகள் அவஸ்தை
ADDED : டிச 05, 2024 02:17 AM

ஸ்ரீபெரும்புதுார்,
சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, வண்டலுார்- - மீஞ்சூர் வெளிவட்ட சாலை, ஸ்ரீபெரும்புதுார்- - சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலை, செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் நெடுஞ்சாலையை இணைக்கும் முக்கிய சாலையாக, வண்டலுார் -- வாலாஜாபாத் நெடுஞ்சாலை உள்ளது.
வண்டலுார் முதல் வாலாஜாபாத் வரை 33 கி.மீ.,நான்கு வழியாக உள்ள இந்த சாலையில், நெரிசலை குறைக்கும் வகையில், தமிழ்நாடு சாலை உள் கட்டமைப்பு மேம் பாட்டு கழகம் சார்பில், வண்டலுாரில் இருந்து ஒரகடம் வரை, 17 கி.மீ, சாலை 150 கோடி ரூபாய் மதிப்பில் விரிவுபடுத்தப்பட்டது.
இரண்டாம் கட்டமாக ஒரகடத்தில் இருந்து வாலாஜாபாத் வரையில், 16 கி.மீ., சாலை, 180 கோடி ரூபாய் செலவில் விரிவுபடுத்தப்பட்டது. இந்த சாலை வழியே, தினமும் 40,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஒரகடம், வல்லம் வடகால், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட சிப்காட் தொழிற்பூங்காக்களில் பணிபுரியும் பல ஆயிரக்கணக்காகன ஊழியர்கள் கார், பைக், தனியார் தொழிற்சாலை வாகனங்களில், இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். தவிர, வாலாஜாபாத், காஞ்சிபுரம், வேலுார் பகுதிகளுக்கும், அதேபோல் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கும் நாள் தோறும் ஏராளமானவாகனங்கள் சென்றுவருகின்றன.
இந்நிலையில், ஒரகடம் மேம்பாலம் முதல் தேசிய வாகன ஆராய்ச்சி நிறுவனம் வரை, சாலை முற்றிலும் சேதமடைந்து, ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது.
கடந்த வாரம் சேதமான சாலையில், பள்ளம் ஏற்பட்டுள்ள பகுதிகளில், ஜல்லிக் கற்கள் கொட்டி சாலையை சீரமைக்கும் பணியில், நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டனர்.
தற்போது, ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்ட பகுதிகள் அரைகுறையாக விடப்பட்டது. இதனால், இவ்வழியாக செல்லும் கனரக வாகனங்களால், சாலையில் இருந்து அதிகமான புழுதி பறக்கிறது.
முன்னால் செல்லும் வாகனம் தெரியாத அளவிற்கு புழுதி மண்டலமாக மாறுகிறது. இதனால், அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் அதிகரித்து உள்ளது. இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகளுக்கு உடல்நலம் பாதிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்டு அரைகுறையாக விடப்பட்டுள்ள சாலையில், தார் ஊற்றி சீரமைக்க நெடுஞ்சாலை துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.